Halal Ads

Saturday 9 March 2013

நாம் அறிய மாட்டோம் - இறைவன் அறிவான்


"...ஒன்று உங்களுக்கு மிக நன்மையானதாக இருந்தும் நீங்கள் அதை வெறுக்கக் கூடும். ஒன்று உங்களுக்கு தீங்காக இருந்தும் நீங்கள் அதை நேசிக்கக் கூடும். அல்லாஹ்வே அணைத்தையும் நன்கறிந்தவன். நீங்கள் அறிய மாட்டீர்கள்."
                                                                                     -அல் பகரா: 216-

இன்றுள்ள மனிதகர்ளின் நிலையை எடுத்து பார்த்தல் அவன் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் உடனே மனமுடைந்து வாழ்கையை வெறுக்கிறான் . இறைவனை திட்டுகிறான். ஒன்றை நாம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் அதனுடைய நட்டத்தை நாம் அறிய மாட்டோம் . அதை இறைவன்தான் அறிவான் . ஒன்று நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதில் உள்ள லாபத்தை நாம் அறிய மாட்டோம் . அதை இறைவன்தான் அறிவான் .

இறைவன் கொடுத்ததை நினைத்து திருப்தி அடைய வேண்டும் .நமக்கு கொடுத்த செல்வத்தை நினைத்து நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இவ்வுலக வாழ்க்கையை விட மறுமைதான் சிறந்தது .

No comments:

Post a Comment