Halal Ads

Monday 11 March 2013

பெற்ற்றோரும் - பிள்ளைகளும்


பெற்றோர்களின் கண்டிப்பும் கட்டுப்பாடுகளும் தான் தம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக பிள்ளைகள் நினைக்கின்றார்கள். காலத்திட்கேட்ப அறிவில்லாத பத்தாம் பசலிகள் என்று அவர்கள் தம் பெற்றோரைப் புறக்கணிக்கவும் சிலவேளைகளில் இழித்துரைக்கவும் துணிகிறார்கள். தமது நண்பர்களையும் சமவயதினரையுமே ஆலோசகர்களாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகவும் கொள்ள அவர்கள் முனைகிறார்கள்.

தம் பெற்றோர்களை விடப் பிள்ளைகள் எவ்வளவுதான் கூடிய அறிவைப் பெற்றுக்கொண்டாலும், வாழ்க்கை அனுபவத்திலும் தூரநோக்கோடு சிந்திப்பதிலும் பெற்றோர் மேம்பட்டவராகவே இருப்பார்கள்.

பெற்றோரின் நியாயமான கண்டிப்பும் கட்டுப்பாடுகளும் ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அவனை நிலைகுலையாமல் உறுதியாக முன்னேற்ற உதவுகின்றன.

இங்கு கட்டுப்பாடு என்பது அளவுக்கு மீறிய, நியாயமற்ற அடக்கியாள்கையைக் குறிக்கவில்லை. மாறாக இளவயதின் அனுபவமின்மை காரணமாக வழி தவறிச் செல்ல வாய்ப்பளிக்காது கவனித்துக் கொள்வதையே அது குறிக்கிறது. ஒரு பிள்ளையின் மீது உண்மையான, தன்னலம் குறைந்த பாசத்தையும் கரிசனையையும் காட்டக் கூடியவர்கள் பெற்றோர்களே. வேறேவராது பாசமும் கரிசனையும் அந்த அளவுக்கு தூய்மையானவையாக ஒருபோதும் அமைந்து விடாது.

No comments:

Post a Comment