Halal Ads

Tuesday 12 March 2013

நம்முடைய மணப்பெண் யார் ?




            நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:

நான்கு வியங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள்
அவளுடைய செல்வத்திற்காக
அவளுடைய குலச் சிறப்புக்காக
அவளுடைய அழகுக்காக
அவளுடைய மார்க்கப்பற்றுக்காக!
 நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

இந்த நபிமொழியின் கருத்தாவது: பெண்ணிடம் நான்கு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. சிலர் செல்வத்தைப் பார்க்கின்றார்கள், சிலர் குலச் சிறப்பை கவனிக்கின்றார்கள், வேறு சிலர் பெண்ணிண் அழகிற்காக மணம் முடிக்கின்றார்கள், இன்னும் சிலரோ மார்க்கப்பற்றைப் பார்க்கின்றார்கள். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும், இறையச்சமுமேயாகும். இதனுடன் மற்றச் சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே! எனினும் மார்க்கப்பற்றைப் பார்க்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:

பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். 


எனவே நாம் அழகைப் பார்க்காமல் , மார்க்கப் பற்றை பார்த்து திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் இறைவனிடமிருந்து அதிகமான நன்மைகளை பெற முடியும்.மேலும்  அப்படிபட்ட ஒழுக்கமான பெண்தான் கணவனுக்கு கட்டுப்பட்டு தன்னுடைய ஒழுக்கத்தை காப்பாள் .

மர்ர்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் மனைவியோடு சேர்ந்து மார்க்க கல்வியை நாம் கற்று கொண்டு அழைப்பு பணியில் ஈடுப்பட்டு இந்த உலகத்தில் அல்லாஹாவுடைய மார்க்கத்தை பரப்ப  வேண்டும் .




No comments:

Post a Comment