Halal Ads

Monday, 4 March 2013

குழந்தைகளுக்கான பாதுகாப்பான BROWSER


இணையத்தில் உலா வருவதற்கு நாம் பயன்படுத்தும் இணைய உலாவிகளை போல பாதுகாப்பாக குழந்தைகள் இணையத்தில் உலாவருவதற்கு பிரத்யேகமான ஒரு இணைய உலாவி வந்துந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


குழந்தைகள் இணைய இணைப்பு பயன்படுத்துவதாக இருந்தால் பல நேரங்களில் நாம் அருகிலே இருந்து சரியான தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லோரிடமும் இருக்கும், இதை தடுக்க பல மென்பொருள்கள் வந்தாலும் சில நாட்களில் பல தளங்கள் இந்த தடைகளை எல்லாம் தாண்டி தெரியத்தான் செய்கிறது இதற்கு ஒரு முழுமையான தீர்வு அளிக்கும் நோக்கில் புதிதாக ஒரு இணைய உலாவி வந்துள்ளது.
தரவிரக்க முகவரி : http://kidoz.net
இத்தளத்திற்கு சென்று Start here என்ற பொத்தானை சொடுக்கி Adobe Air நிறுவிய பின்னர் இந்த அப்ளிகேசன் திறந்த பின் Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவ ஆரம்பிக்க வேண்டியது தான்அடுத்து வரும் திரையில் Parent பெயர் இமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல், குழந்தையின் செல்லபெயர் கொடுத்து உள்நுழைய வேண்டியது தான். முழு திரையில் தெரியும் இந்த உலாவியைப்பயன்படுத்தி குழந்தைகள் இனி இண்டெர்நெட்-ல் உலாவ ஆரம்பிக்கலாம். குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய வீடியோ,விளையாட்டுகள் மற்றும் பாதுகாப்பான இணைய தேடல் என அனைத்தும் செய்யலாம் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த உலாவி மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment