Halal Ads

Thursday, 7 March 2013

அந்நிய நாட்டு பொருட்களை தவிர்ப்போம்



இப்போதெல்லாம் பள்ளிகூட வாசல்களில் கூட பாட்டி கடைகளை காணமுடிவதில்லை..!!!

முடிந்தவரை பன்னாட்டு தயாரிப்புகளை வாங்குவதை சிறிது சிறிதாக தவிர்த்து இந்திய தயாரிப்புகளை, அதிலும் குறிப்பாக தமிழர்களின் தயாரிப்புகளை வாங்கி, யாரோ ஒரு அந்நியனை வளர்த்து விடுவதற்குப் பதிலாக நம் சமூகத்திலும் நாலு பேரை முதலாளிகளாக மாற்றிப்பார்க்க நமக்கு ஏன் தோன்றுவது இல்லை என்று புரியவில்லை...

நமது தயாரிப்புகளில் தரம் சிறிது குறைவாக இருக்கும் என சிந்திப்பது புரிகிறது. PEPSI நிறுவனம் 1890-ல் தொடங்கப்பட்ட போதும், KFC நிறுவனம் 1930-ல் தொடங்கப்பட்ட போதும் அவர்களின் தயாரிப்புகளில் இப்போது இருக்கும் தரம், ஆரம்ப காலங்களில் இருந்திருக்க சந்தேகம் தான். சிறிது சிறிதாகத் தான் தரத்தை உயர்த்த முடியும். அதற்க்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளித்தால் மட்டுமே பொருட்களை தயாரிப்பதற்கும், படிப்படியாக தரம் உயர்த்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்...

நடைபாதை வியாபாரிகளிடம் முடிந்தவரை பேரம் பேசுவதை தவிர்க்கலாம். நாம் ஒரு மணி நேரத்தில் ருசிக்கு செலவிடும் பணம் அவர்களின் ஒரு மாத வாழ்க்கைக்குப் பயன்படும்..
அவர்கள் பிச்சை எடுக்கவில்லை. உழைக்கிறார்கள்..!!!

இனி வரும் தலைமுறை, இது போன்ற பள்ளிகூட வாசலின் பாட்டி கடைகளைப் பற்றி வரலாற்றில் கூட படிக்க வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்..!!!

262709_322500801197490_404231671_n.jpg

No comments:

Post a Comment