அளவுக்கு மீறி கோக்கோ கோலா பானம்
குடித்ததால் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் இறந்ததாக மரண
விசாரணை அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடாஷா ஹாரிஸ் என்ற இந்தப் பெண் தினமும்
10 லிட்டர் கோக்கோ கோலா குடித்ததாகக் கூறப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் இவர்
மாரடைப்பால் இறந்தார்.
இந்த அளவு குடித்ததால், அவர்
தினமும் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்குக்கும் மேலான அளவு
கேபெயின் என்ற ரசாயனப்பொருளை உட்கொண்டிருந்தார்.
எட்டு குழந்தைகளின் தாயான நடாஷாவின்
பற்கள் சிதைந்ததன் காரணமாக எடுக்கப்பட்டிருந்தன. அவர் விழித்திருக்கும் நேரம்
முழுவதும் கோக்கோ கோலா குடிப்பாராம்.
கோக்கோ கோலா நிறுவனம், தனது
பானம்தான் இவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தது என்பதை நிரூபிக்க முடியாது என்று
வாதிட்டது.
No comments:
Post a Comment