பிஸ்மில்லாஹ்....
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனக்குத் தெரிந்த,
நம்மால் உடனடியாக செய்ய முடிந்த,
செய்யப் படவேண்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். சிறு
முயற்சி ஆனால் இன்ஷாஅல்லாஹ் பலன் விருட்சமாக இம்மையிலும் மறுமையிலும்.....
இன்றைய நிலைமை:
இது ”தகவல்களின் யுகம்” (Information Age). ஒவ்வொரு
காலத்திலும் சத்தியத்திற்கும் அசத்தியதிற்கும் இடையே போராட்டங்கள்
நடந்துகொண்டேயிருக்கும்.
தற்போதைய யுகத்திலும் இந்த போரட்டம் நடந்துகொண்டிருக்கின்றது.ஆனால் அசத்தியத்தில் இருப்பவர்கள் முழுமூச்சில் களத்தில், சத்தியத்தில் இருப்பவர்கள் முழு தயக்கத்தில்…
தற்போதைய யுகத்திலும் இந்த போரட்டம் நடந்துகொண்டிருக்கின்றது.ஆனால் அசத்தியத்தில் இருப்பவர்கள் முழுமூச்சில் களத்தில், சத்தியத்தில் இருப்பவர்கள் முழு தயக்கத்தில்…
களம்: இணைய தளங்கள். (Youtube, News (Paper) sites, blogs etc..)
தயக்கத்தில் இருக்கும் சத்தியத்தின் போராளிகள்: இணைய தளங்களை உபயோகிக்கத் தெரிந்த நாம் ஒவ்வொருவரும்.
தயக்கத்தில் இருக்கும் சத்தியத்தின் போராளிகள்: இணைய தளங்களை உபயோகிக்கத் தெரிந்த நாம் ஒவ்வொருவரும்.
என்ன செய்ய வேண்டும்:
என்னைப் பொருத்தவரை நம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்க
வேண்டிய நேரம் இது. சத்தியத்தை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் எடுத்து வைக்கப்பட
வேண்டும்.
உதாரணத்திற்கு இந்த குழுமங்களில் வரும் நல்ல கருத்துக்களை / வாதங்களை நமக்கிடையே மட்டும் பரிமாறிக் கொள்வதினால் அதன் பலன் முழுமையடைவதில்லை.
நம்மிடையே முழு தன்னம்பிக்கையுடன் (self confidence) பரிமாறும் நாம் வெளி களங்களில் (தளங்களில்) இவைகளை எடுத்து வைக்காமல் ஒதுங்கிவிடுகின்றோம் (தயக்கம்).
பொது தளங்களில் மற்றவர்களும் பார்க்கும் விதத்தில் இவைகள் எடுத்து வைக்கப்பட்டால் தான் இதன் பலன் முழுமையடையும்.

எப்படி:
இந்த காலத்தில் செய்தியைவிட அதிகமாக படிக்கப்படுவது
அதன் கீழேயுள்ள வாசகர் கருத்துக்கள் தான். (User Comments.). ஒரு
செய்தி நம்மைப் பாதிப்பதைவிட அதன் கீழேயுள்ள கருத்துக்கள் தான் நம்மை அதிகம்
பாதிக்கின்றன. (Comments are more
effective than the News / Video. Sometimes within us it creates the feeling
that the comments are giving a new dimension to the news / video).
Youtube, News Paper
sites, blogs etc.. போன்ற தளங்கள் பொதுவானவை. இதில்
பரிமாறப்படும் கருத்துக்கள் தான் இணைய தள பார்வையாளர்களின் உள்ளத்தில் பாதிப்புகளை
ஏற்படுத்துகின்றன. ஒரு தவறான செய்தி / வீடியோ வின் கீழ் பதிக்கப் படும் சத்திய
கருத்துக்கள் மூலம் அதை தவறான செய்தி/ வீடியோ என்று அதைப் பார்க்கும்
ஒவ்வொருவருக்கும் நம்மால் மிக எளிதில் புரிய வைக்க முடியும்.
இஸ்லத்திற்கான எதிரான, உண்மைக்கு எதிரான, செய்திகள்
கருத்துக்கள் தென்பட்டால் அங்கேயே அப்போதே உண்மையை பதிவு செய்ய வேண்டும். . ஒரு
நாளைக்கு குறைந்த பட்சம் ஒன்றை செய்தால் கூட போதும். (எத்தனை மணி நேரத்தை
இண்டெர்னெட்டில் செலவழிக்கின்றோம்?.) . இந்த குழுமத்தில்
வரும் நல்ல கருத்துகளில் சிலவற்றை “காபி பேஸ்ட் (Copy Past)” செய்தால்
கூட போதும்.இதை செய்ய முடியவில்லையெனில் நல்ல கருத்துக்கள் (Eg.: youtube) இருந்தால்
அதை ஒரு “Like”கிளிக்காவது
செய்யலாம்.
சிறு துளிதான் பெருவெள்ளமாக மாறுகிறது.... யார்
அறிவார்? நமது
இந்த முயற்சி நாளை ஒரு குஜராத், ஒரு கோவை உருவாகுவதை
தடுக்கலாம்.
சத்திய ஸஹபாக்கள் உயிரை கொடுத்து முஸ்லீம்களின் உயிர், உடைமை, மானம், மரியதையை
காப்பாற்றினார்கள்., நம்மால்
ஒரு கருத்தை கொடுக்கமுடியாதா?
இன்றைய சோதனை மிகுந்த கால கட்டத்தில் நம்மை வாழ வைத்த
அல்லாஹ் நன்மைகளை அள்ளுவதற்கும் மிக எளிதான வழிவகைகளை ஏற்படுத்தி
கொடுத்திருக்கின்றான் ஏனெனில் அவன் நீதி தவறாதவன். போர்களத்திற்கு செல்லாமலே புனித
போராளிகளின் பலனை அடையக்கூடிய மிக அருமையான ஒரு வாய்ப்பு. தவற விட்டுவிட வேண்டாம்.
மறுமையில் கைசேதமடைய வேண்டாம். நாளை இஸ்லாத்திற்காக
குறிப்பு: உங்களது பெயரில்
கருத்தை (Comments) பதிய
தயக்கமெனில் புனைப் பெயரில் பதிவு செய்யுங்கள். ஆனால் கண்டிப்பாக பதிவு
செய்யுங்கள்.
அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். செய்து
பாருங்கள். உங்களது உள்ளத்தில் ஒரு ஆத்மார்த்த திருப்தியை உணர்வீர்கள். ஒருவர்
செய்தால் கூட அவருக்காக இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் துஆ செய்வேன்.
No comments:
Post a Comment