Halal Ads

Monday, 18 March 2013

சிங்கத்தின் பாசம் : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்


                   அன்பு. சிறிய வார்த்தையாக இருந்தாலும் எவ்வளவு மகத்துவம் வாய்ந்த வார்த்தை. உலகின் அனைத்து நெறிமுறைகளும் வலியுறுத்துவது இதைத்தான். உலகமெங்கும் அன்பு நிறைந்து விட்டால் துன்பம் எனபதேது? எவ்வளவு பரவசமான அற்புத உணர்வு அது? அன்பு செலுத்தும் போதும், பெறப்படும் போதும் அடைய கூடிய அந்த உணர்வை அன்பு பகிரப்படுவதை காணும் போதும் நாம் பெற முடியும் என்பதை உணர்த்தியது இந்த உண்மை சம்பவ வீடியோ.



1969 -ம் ஆண்டு ஜான், போர்க் இருவரும் சிறிய கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்க குட்டியை வீட்டிற்கு வாங்கி வந்தனர். கிறிஸ்டியன் என்று பெயரிடப்பட்ட அந்த சிங்கம் பாசம், விளையாட்டுகளுடன் பெரிதாக வளர்ந்தது. சிங்கம் காட்டில் இருப்பதே அதற்கு சுதந்திரமான வாழ்க்கை முறையை தர முடியும் என்று உணர்ந்த அவர்கள் 1971 -ம் ஆண்டு சிங்கத்தை தென் ஆப்பிரிக்க காடுகளில் சென்று விட்டனர். ஒன்பது மாதங்கள் சென்ற பின்பு அந்த சிங்கத்தை அவர்கள் மீண்டும் சந்திக்க காட்டிற்கு சென்றனர். அப்போதுதான் அற்புதம் நிகழ்ந்தது. முதலில் தயங்கி நின்ற அந்த சிங்கம் தன்னை வளர்த்தவர்களை அடையாளம் கண்ட பின்பு தாவி கட்டி கொண்டது. உன்னதமான காட்சி. அதன் கொஞ்சலை பாருங்கள். அன்பு உங்களையும் ஆட்கொண்டு விடும்.









source:-
tvs50blogspot.com




No comments:

Post a Comment