தனது அருளுக்கு முன்னால்
நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது
இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும்
வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்)
நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்குர்ஆன் 7:57)
(அல்குர்ஆன் 7:57)
சூல்
கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு
அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15:22)
(அல்குர்ஆன் 15:22)
சூரியன்
பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள
காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால்
புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப
நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே
சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வௌ;வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும்
மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று
விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து
வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது.
இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.
இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. இப்பொறியியல் (Mechanism) மீள் சுழற்சியாக (re cycle) நடைபெற்று வருகின்றது.

இதையே
அல்லாஹ் சுருக்கமாக, சூல்
கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு
அதைப் புகட்டுகிறோம் என அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43).
மேலுள்ள
குர்ஆன் வசனத்திற்கேற்ப மழை மேகங்கள் திட்டமான படிமுறைகளுக்கு அமையவே ஒவ்வொரு
வடிவங்களாக உருவாக்கப்படுகின்றன.
மேலுள்ள படத்திற்கமைய,
முதல் படித்தறம்:
காற்றின் மூலம் மேகங்கள் ஒன்று திரட்டப்படுகின்றன.
இரண்டாம் படித்தறம்:
காற்றானது சிறிய மேகங்களை ஒன்று சேர்த்து பெரிய மேக மூட்டத்தை உருவாக்கும்.
இவ்விரு படிமுறைகளையும் அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மூன்றாம்
படித்தறம்:
சிறிய மேகங்கள் எல்லாம் ஒன்றாகக் குவிவதன் மூலம் பெரிய மேக மூட்டம் தோன்றி இதன் நடுவில் நீர் ஆவியாகும் விகிதம் இதன் ஓரங்களை விட அதிகளவில் காணப்படும். இதனால் மேகமானது செங்குத்தான நிலையில் வளர்ச்சியடைந்து காணப்படும். இதனால் வளிமண்டலத்திலுள்ள குளிரான பிரதேசத்திற்கு இவ் வளர்ச்சியடைந்த பகுதி ஒடுங்கி பெரியளவில் ஆலங்கட்டியாக உருவெடுக்கும். நீர் ஆவியாகி இவ்வாறு ஆலங்கட்டியாக உருவாகி மேகத்தினூடாக மழையாக நிலத்தில் விழும். இதையே அல்லாஹ், அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான் எனக் குறிப்பிடுகின்றான்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிக அண்மையில்தான் மேகங்களின் உருவாக்கம், அமைப்பு, மழை உருவாகும் தொழினுட்பம் ஆகிய தகவல்களை நவீன தொழினுட்ப முறைகளின் மூலம் அறிந்துகொண்டனர்.
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு இவ் அறிவியல் உண்மையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அல்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைவேதம் என்பது இந்த இடத்திலும் எந்த சந்தேகமும் இன்றி நிரூபனமாகின்றது.
மின்னல்
அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் 13: 12,13)
மழை மேகங்களிலுள்ள அணுக்கள் உராய்ந்தோ அல்லது பிற வழிகளிலோ மின்னோட்டம் பெற்று விடுகின்றன. (மின்னோட்டம் பெறும் வழிகள் இன்னும் முற்றிலுமாக விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை). இவ்வாறு மேகக் கூட்டங்கள் மின்னோட்டம் பெற்றிருக்கையில் எதிர் மின்னோட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும்போது மின்னோட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியாக மின் ஆற்றல் பாய்ந்து மின்னோட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னோட்டம் பாயும்போது இடியுடன் மின்னல் தீப்பொறி போல ஒளிக் கீற்றாய் தென்படுகின்றது. சில வேளைகளில் மின்னலானது மரத்தையோ, நிலத்தையோ தாக்கக்கூடியதாக இருக்கும்.
மேலுள்ள குர்ஆன் வசனத்தில் மின்னலைப் பற்றி அல்லாஹ் கூறுகையில், அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான் எனக் கூறுகின்றான்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மேலோங்கியுள்ள இக்கால கட்டத்திலேயே மேகங்களின் மூலம் மின்னோட்டம் ஏற்படும் முறை முற்றிலும் அறியப்படாது இருக்கும் நிலையில் எவ்வாறு 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பளுவாக மேகங்களினூடாக மின்னல் தோன்றுகின்றது என்ற அறிவியல் உண்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள்?
நிச்சயமாக, அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

source:-
www.sltj.com
No comments:
Post a Comment