நம் வீடு அல்லது அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில் கம்ப்யூட்ரானது வேலை செய்யாது. அப்படியே நின்றுவிடும். இது எதனால் தெரியுமா?
கம்ப்யூட்டருக்கு அதிகப்படியான வேலை தருவதாலோ அல்லது கேம்கள் விளையாடுவதாலோ கூட ஏற்படலாம். வைரஸ்கள் கூட உங்கள் கணினியின் வேகத்தை குறைத்திருக்கலாம்.
கணினியானது வேகமாக இல்லையென்றாலே நம்மால் வேலைகளை எளிதில் முடிக்கவே முடியாது. அல்லது ‘கேம்கள்’ கூட நிம்மதியாகவே விளையாட முடியாது. இதற்கு என்னதான் வழி?!
உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக்கவேண்டும். அதற்கு எளிதான பல வழிகள்:-
கம்ப்யூட்டரை ஆன் செய்தால் சிறிது நேரத்திற்குப்பிறகு தான் கணினியானது தொடங்கப்படும். இதை ‘ஸ்டார்ட்-அப்’ என சொல்கிறார்கள். இந்த ‘ஸ்டார்ட்-அப்பானது’ விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லை என்பதை நினைவில்கொள்க.
இந்த ‘ஸ்டார்ட்-அப்’களில் உள்ள தானாக இயங்கும் சில அப்ளிகேசன்களை நீக்குங்கள். இதை செய்வதற்கு “msconfig” என ரன்னில் தட்டச்சு செய்து, வரும் திரையில் ‘ஸ்டார்ட்-அப்’ என்பதை தெரிவுசெய்யுங்கள்.
இதில் எந்தெந்த அப்ளிகேசன்கள் இருக்கவேண்டும், எவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இதை சரிசெய்தாலே உங்கள் கணினியானது சற்றே வேகமாகும்.
No comments:
Post a Comment