குர்ஆனின்
நற்போதனைகள்
(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக்
கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து
விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே
வெற்றி பெற்றோராவர்.3:104
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே
அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள்
அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். 3:130
எவர் (நரக) நெருப்பிலிருந்து
பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர்
நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். 3:185
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்
(இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்)
பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு
அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும்
கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள்
சதா ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான
வெற்றியாகும். 4:13
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை
வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்
அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் விலகிக்
கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். 5:90
அந்தாளில் எவரொருவர் வேதனையை விட்டும்
விலக்கப்படுவாரோ அவர்மீது (அல்லாஹ்) கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான
வெற்றியாகும்” 6:16
அன்றைய தினம் (நன்மை தீமைகளை) எடைபோடுவது
உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம்
வெற்றியாளர்கள். 7:8
எவர்கள் ஈமான் கொண்டு தம் நாட்டை விட்டும்
வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில்
அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும்
அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 9:20
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ
செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள்
இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி
பெரும் பொருட்டு நன்மையே செய்யுங்கள். 22:77
உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும்
(அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள்
அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க
நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் வெற்றியாளர்களாவார்கள். 30:38
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களை
அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத்
தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். 39:61
எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து
வந்தார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான
வெற்றியாகும். 45:30
(ஜுமுஆ)
தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத்
தேடிக் கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம்
தியானம் செய்யுங்கள். 62:10
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி
நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு
வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே
மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள்
உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். 64:16
No comments:
Post a Comment